அரச ஊழியர்களின் சம்பளம் பற்றிய அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் தாமதமின்றி நாளை (25) சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு 6 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அரச துறையில் நிறைவேற்று தரத்திலுள்ள அதிகாரிகளது சமபளத்தை தாமதித்து வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும் நாளை நிறைவேற்று தரத்திலுள்ள மற்றும் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் தாமதமின்றி வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.