அமைச்சர் தம்மிகவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் சீன திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராவுடன் சீனா இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

சீனத் தூதுவர் Qi Zhenhong அமைச்சர் தம்மிக பெரேராவை சந்தித்துள்ளார்.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இலங்கையில் சீன முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவித்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராவின் கீழ் சில சீன நிதியுதவி திட்டங்கள் உட்பட பல நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் பொறுப்பு புதிய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.