அமெரிக்க டொலருக்கு நிகராக 24.2% ரூபாவின் பெறுமதி உயர்வு

1 year ago
aivarree.com

இந்த வருடத்தில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின்படி நேற்று வரையான காலப் பகுதியில்,

இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யூரோவுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 23 வீதமும், இந்திய ரூபாவுடன் ஒப்பிடுகையில் 23.5 வீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.