பற்பசைக்குள் போதைப்பொருளை மறைத்துவைத்த நபர் கைது

1 month ago
Sri Lanka
aivarree.com

கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள் (Tube) போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.