‘ரணில் அரசாங்கம் வீழ்வதற்கு நான் காரணமாக அமைய மாட்டேன்’ என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் வீழ்ந்து அடுத்ததாக வரக்கூடிய அரசாங்கம் மிகவும் மோசமானதாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.