மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது

1 week ago
World
aivarree.com

பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும், அதன் பின்னர் ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை மேற்குலக நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடனும் கவனித்து வருவதாகவும், ரஷ்ய-இந்திய உறவுகளுக்கு பிரதமர் மோடியின் வருகை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.