இசையமைப்பாளர் விக்கி விக்னேஷ், தமது புதல்வன் நவீவ் ஏரோனின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிய காணொளி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு தந்தை தமது மகனுக்கு வழங்குகின்ற அறிவுரையாக இந்த பாடல் அமைந்துள்ளது. அத்துடன் அதன் காணொளியில் ஏரோனின் சிறுவயது காணொளிகள் மற்றும் படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பின்னணி தாளம் மற்றும் விசேட ஒலிகளுக்கும், ஏரோனின் குழந்தை வயது குரல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாடலுக்கான இசை, வரிகள் மற்றும் ஒலிக்கலவை என்பவற்றைச் செய்து, இந்த பாடலை விக்கி விக்னேஷே பாடி இருக்கிறார்.
பாடல்