மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தையடுத்து 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரு சமூகங்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் கலவரமாக வெடித்தலில் ஐவர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு பல்வேறு வன்முறைச் சம்பவம் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்தையடுத்து, கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அரசு தடை விதித்துள்ளது.
அத்துடன் தவ்பால் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டவிதி 163 (2)ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.