பொது மக்களிடம் இருந்து பணப்பை உள்ளிட்டவற்றை களவாடி வந்த நபர் ஒருவர் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து களவாடுவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட 2 கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகம் வராதபடி கூர்மையாக்கப்பட்ட இந்த கருவிகளைக் கொண்டு அவர் நீண்டகாலமாக களவுகளை புரிந்து வந்துள்ளார்.
குறிப்பாக பெண்களின் கைப்பை மற்றும் பயண பை என்பன அவற்றை பயன்படுத்தி பறித்து வந்ததாக கைதானவர் ஒப்புகொண்டுள்ளார்.