ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் நேற்றுமுன்தினம் (07) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் உரிமை கிடையாது என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்திற்கு வராத அநுரகுமார, சஜித் பிரேமதாச, நாமல் , வரமுடியாது என முன்கூட்டியே கடிதம் அனுப்பிய ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இனி இந்த நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு உரிமையில்லை. .
அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்பது இலங்கை மக்கள் அனைவருக்கும் இன்று தெரியும். அதனால் தான் அவர்கள் வரவில்லை.
பல தசாப்தங்களாக இந்த நாட்டை மீட்க முடியாத காரணத்தை சரி செய்யும் வேலைத்திட்டம், எமது இலங்கை அரசியலில் இதுவரை கண்டிராத வேலைத்திட்டம்.
அதனால்தான் நாங்கள் அதை மூலோபாய திட்டம் என்று அழைத்தோம்.
இந்த நாட்டில் உள்ள சிறிய தொழில்முனைவோர் முதல் பெரிய தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரி வரை உள்ளடக்கிய திட்டமாகும்.
அவர்களின் வாழ்க்கை மாறும் காலத்தை கணித்த ஒரு திட்டத்தை நாங்கள் வழங்கியுள்ளோம்.
அதில் எந்த வாக்குறுதியும் இல்லை. அதற்கு ஒரு திட்டம் உள்ளது. நிரலும் எழுதப்பட்டுள்ளது. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.