ஊடகர் ரஞ்சன் அருண் பிரசாத் நடிப்பில் நாளை வெளியாகும் படம்

1 month ago
Infotainment
aivarree.com

இயக்குநர் ரொஹான் நாராயணனின் இயக்கத்தில், ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாத்தின் நடிப்பில் உருவாகியுள்ள குறுந்திரைப்படம் RULE IS RULE.

இந்த குறுந்திரைப்படத்தின் First Look இன்று வெளியிடப்பட்ட நிலையில், குறுந்திரைப்படம் நாளை (13) முற்பகல் 11:11க்கு வெளியிடப்படவுள்ளது.

இந்த குறுந்திரைப்படத்தில் மறைந்த இலங்கையின் பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜின் சகோதரி சிகிவாஹினி அறிமுகமாகுகின்றார்.

குறுந்திரைப்படத்தின் இயக்குநர் ரொஹான் நாராயணன் விசேட கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன், பிரகாஷ், சஞ்ஜீவ், ஜோதிமணி லோகேஸ்வரன், குணரத்னம், பேபி டேவிட் கவிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை ரொஹான் நாராயணன் செய்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு சோமா, ரிதிகா கிருபாகரன், விஸ்ணு கார்த்திக், பையர் கார்த்திக் ஆகியோர் பின்னணி குரல் வழங்கியுள்ளனர்.