2024ம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், இன்று அதன் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது பாதீட்டின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் வழங்கப்பட்டன.
அதன்படி அது 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அடுத்தகட்டமாக பாதீட்டின் மீதான குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளது.