விருவிருப்பான இறுதிப் போட்டியில் வென்றது இந்தியா 

2 weeks ago
SPORTS
aivarree.com

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள், 20/20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இன்று மோதின. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. 

விராட் கோலி 76 ஓட்டங்களைப் பெற்றார். 

ஆடவர் 20/20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி ஒன்றில் ஓர் அணி பெற்ற அதிகூடிய ஓட்டம் இதுவாகும். 

பின்னர் 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடி தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. 

ஹென்ரிச் க்ளாசன் 52 ஓட்டங்களைப் பெற்றார். 

ஹார்டிக் பாண்டியா 3 விக்கட்டுகளையும் ஜஸ்ப்ரிப்ட் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், 13 ஆண்டுகளின் பின்னர் 20/20 உலகக்கிண்ணத் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.