T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி – இந்தியா – தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை

2 weeks ago
SPORTS
aivarree.com

2024 T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு (29) 8:00 மணிக்கு பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடர் (2023), தற்போது ரி-20 உலகக்கிண்ணத் தொடர் என மூன்று உலக இறுதிப்போட்டிகளில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை ரோகித் சர்மா பெறுகிறார்.

தென்னாபிரிக்காவும் இம்முறை அபாரமாக செயற்பட்டு, விமர்சனங்களை தகர்த்து இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.