T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வௌியானது

3 weeks ago
SPORTS
aivarree.com

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த போட்டி அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகிறது.

அரையிறுதிப் போட்டிகள் 17 மற்றும் 18ஆம் திகதிகளிலும், இறுதிப் போட்டி அக்டோபர் 20 ஆம் திகதியும் நடைபெறும்.

இந்த போட்டிகளுக்கான மேலதிக திகதியை சர்வதேச கிரிக்கெட் வழங்கியுள்ளது.

இந்த போட்டியில், அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் குழு A இன் கீழ் போட்டியிடும்.

குழு B இல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போட்டியில் 23 போட்டிகள் துபாய் மற்றும் ஸாஜா மைதானங்களில் நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.