தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பிரசன்ன

5 days ago
Sri Lanka
aivarree.com

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

நாட்டின் பொருளாதார நெருக்கடியுடன் அனைத்தையும் செய்ய முடியாது என்பதை அந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், அந்த நிலையை நாட்டு மக்கள் பெரும்பாலும் புரிந்து கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்

மேலும் சில தொழிற்சங்க தலைவர்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கும் தீர்மானங்களினால் மக்கள் அவதியுறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.