சுனிதா இன்றி பூமிக்கு திரும்பும் ஸ்டார்லைனர் விண்கலம்

2 weeks ago
World
aivarree.com

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மாத்திரம் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.

அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன், விண்வெளி மையத்தில் சுமார் 90 நாட்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர, நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அவர்கள் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் தான் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆளில்லா போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமையன்று பூமியில் தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.