ஜே.ஸ்ரீரங்கா குறித்து சபையில் தயாசிறி சுட்டிக்காட்டு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட போதிலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா 8 மாதங்களாக சிறையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.

அந்தச் சட்டத்தின் பிரகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்படவுள்ள நபருக்கு நீதிவான் நீதிமன்றில் பிணை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தகுதியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.