யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி இயற்கையாக உயிரிழந்தமைக்கான சான்றுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கையின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், கைதியின் உடலில் காயங்கள் உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் வட்டுக்கோட்டை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.