வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரும்பு பாதுகாப்பு வேலிகள் கொண்டு வரப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.