சீனிக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (21) இரவு நீக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய வர்த்தமானி அறிவிப்பின்படி, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை ரூ.275 ஆகவும், சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு ரூ.330 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
அதேநேரம், பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோவுக்கு ரூ.295 ஆகவும், சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு ரூ.350 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.