பாராளுமன்றம் இன்று (03) காலை கூடவுள்ளது.
பாராளுமன்றத்தை இன்று முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), மத்தியஸ்த (விசேட வகுதிளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.