கடும் மழையினால் கண்டி மாவட்டத்தின் பல பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது.
இதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் கோரலய, உடுநுவர, பாததும்பர, மெததும்பர மற்றும் உடுதும்பர ஆகியவை மண்சரிவு அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.