ஹப்புத்தளை-கிளனோர் தோட்டத்தில் வசிக்கும் 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த இடத்தை பரிசோதித்ததன் பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
வெளியேற்றப்பட்ட மக்கள் தோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.