வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை, திம்புலாகல மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டினை நகல் எடுக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் தனுர தயானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய மற்றும் மிகப் பெரிய கல்வெட்டு இதுவாகும்.
கல்வெட்டு 45 அடி நீளமும் 18 அடி உயரமும் கொண்டதாகும்.
தொல்பொருள் திணைக்களத்தின் தலைமை அலுவலக கல்வெட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் இந்த அரிய கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கல்வெட்டினை நகலெடுக்கும் பணி கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி தொடங்கியதாகவும், கடந்த நவம்பர் 18 ஆம் திகதி நகல் எடுக்கும் பணி நிறைவடைந்ததாகவும் தொல்பொருள் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.