தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த எச்சரிக்கை நாளை (21) காலை 10.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கம் உயர் மட்டத்தை எட்டியுள்ளதால் வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, சிலாபம், ரஸ்நாயக்கபுர, ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால், அப் பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாக பயணிக்கும் வாகன சாரதிகளும் அதிக அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இது தொடர்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.