சுகாதார அமைச்சின் நான்கு அதிகாரிகள் கைது

2 weeks ago
Sri Lanka
aivarree.com

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் உட்பட நான்கு உயர் அதிகாரிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்காவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் நேரன் தனஞ்சய மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவின் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னதாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.