அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான சுற்றுலா இல்லங்கள், விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகளை தேர்தலின் போது அரசியல்வாதிகள் அல்லது வேறு எவருக்கும் வழங்குவதை தவிர்க்குமாறு அனைத்து நிறுவன தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அவ்வாறான இடங்களில் தங்கியுள்ள மக்கள் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அரசு கட்டிடங்கள் மற்றும் அவற்றின் வளாகங்களில் காட்சிப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் குறித்த அறிவிப்பில் சட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட அதிகாரிகள் விடுப்பு எடுக்கவோ, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.