தேர்தல்கள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு

1 month ago
Sri Lanka
aivarree.com

மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான விடயங்கள் குறித்தும் அவர் இதன்போது தௌிவுபடுத்தினார்.

“செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்கள,மேலும் மதத் தலைவர்களுக்கு ஆட்பதிவு திணகை்களத்தினால் வழங்கப்பட்ட அடையாளஅட்டை என்பவற்றை உபயோகிக்லாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதேவேளை மேலே குறிப்பிட்ட அடையாள அட்டைகள் எதுவும் இல்லாதவர்கள் தேர்தல்கள் செயலகத்தினால் வழங்கப்பட்ட தற்காலிய அடையாள அட்டையை வாக்களிக்க பயன்படுத்தலாம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.