SLvAFG முதல் ஒருநாள் போட்டி ; நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான்

11 months ago
SPORTS
aivarree.com

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியானது இன்று காலை 10.00 மணிக்கு அம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் இந்தியன் பிரீமியர் லீக்கில் தனக்கென ஒரு புதிய பாதையினை உருவாக்கிய மத்தீஷ பத்திரன தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.