பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் ஜாய் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் சஜீப் வசீத் குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பங்களாதேஷின் நிலைமையில் வெளிநாட்டு தலையீடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஐ. எஸ் புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.