கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றல்

4 weeks ago
Sri Lanka
aivarree.com

கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.