உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 36 போ் பலி – 171 பேர் படுகாயம்

1 week ago
World
aivarree.com

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 171 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 865 நாளாக நீடித்து வருகிறது.

மேலும், உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.