மேலும் 14 துறைகளில் இருந்து வரி அறவிட தீர்மானம்

1 week ago
Sri Lanka
aivarree.com

இதுவரையில் கவனம் செலுத்தாத மேலும் 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவிடத் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்

கடந்த ஆண்டு, 14 துறைகள் வரி செலுத்துவதற்காக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும், அவற்றில் பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் என்பனவும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் குறித்த 14 துறைகளில் அடங்குபவர்களின் வருமானம் குறித்தும் உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் தெளிவான விசாரணை ஒன்றை நடத்தி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.