இந்த வருட வரி வருவாயின் வலுவான செயல்திறன் காரணமாக, கடந்த கால வரி சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் தனிநபர் வருமான வரி எல்லையை 500,000 ரூபாயிலிருந்து ரூ.720,000 ஆக மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF)அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரைக்கு IMF திருத்தங்களை முன்மொழிந்துள்ளதோடு குறைந்த வரி மட்டத்தினைக் கொண்டோருக்கு அதிக நிவாரணம் வழங்குதல், நடுத்தர வரி மட்டத்தினருக்கும் இதே போன்ற நிவாரணம் அளித்தல் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு சற்று குறைவான நிவாரணம் வழங்குதல் மற்றும் இந்த திட்டத்தின் நோக்கத்தை மாற்றாதிருத்தல் என்பன இதில் அடங்கும்.