ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனமடுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ரணிலுக்கு பதில் வழங்குவதற்காக நேரடி உரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கின்றேன். ரணில் விக்கிரமசிங்க இப்போது ஒன்றை அடிக்கடி சொல்லி வருகின்றார். அனுரவை எனது நண்பர் என ரணில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். எனது நண்பர் அனுர என்று எல்லா இடங்களிலும் குறிப்பிடுவதை அவதானித்தேன்.
எதற்காக அவ்வாறு கூறுகிறார் தெரியுமா?அமைதியாக இருங்கள் நான் அதை கூறுகிறேன்.
அவர்களிடம் நாம் அகப்பட மாட்டோம். அவர் சொன்னதையே மீண்டும் கூறுகிறார்.
என்னிடம் ரணில் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.சில கேள்விகளுக்கான பதில் என்னிடமுண்டு ரணில் விக்கிரமசிங்க, கவிதை போன்று மேடைக்கு மேடைக்கு பாரதூரமான கேள்விகளை முன்வைக்கின்றார்.
அவரது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது, எனவே நாம் திறந்த உரையாடலை நடத்துவோம். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாகப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், உங்களிடம் கேள்வி கேட்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எனவே ஓரே மேடையில் ஒன்றாக அமர்ந்து இப்படி விவாதம் செய்வோம், நீங்கள் கேளுங்கள், நான் சொல்கிறேன்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.