தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சித்தார்த்தன், செல்வம் அடைக்கல நாதன், கோவிந்தன் கருணாகரன் போன்றவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை சமஷ்டி அடிப்படையிலான தீர்வே என தமிழ்த் தரப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பலமான பாராளுமன்றம் அமைந்தால் நிச்சயமான சமஷ்டி குறித்து கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார்.