நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கின்ற மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்தாண்டில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வழங்கியுள்ளார்.
நேற்று இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிட்டு, அதன் பின்னர் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
விகிதாச்சார முறைமையின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதில் இருக்கின்ற சிக்கல்கள் காரணமாகவே இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற நிலையில், பழைய முறைமையிலான விருப்புவாக்கு அடிப்படையில் அதனை நடத்துவதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருக்கிறார்.
அந்த பிரேரணையை இம்மாத இறுதியில் பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்குத் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.