எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் காவல்துறை மா அதிபரை நியமிப்பது ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் முறைப்பாடுகளை தாக்கல் செய்ய வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவரது சட்டத்தரணி ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த விடயத்தில் தலையிடுவதில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாக ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
காவல் மா அதிபராக பணியைத் தொடர தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, பதில் காவல் மா அதிபர் ஒருவரை நியக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.