கோழி இறைச்சி கொள்வனவின் போது அவதானம்

1 week ago
Sri Lanka
aivarree.com

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகளின் இறைச்சியே பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்