ர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது ICC 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கவில்லையென அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பிரவீன் ஜயவிக்ரமவிற்கு அனுப்பப்பட்ட வட்ஸ்அப் செய்தியையும் அவர் அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அவருக்கு 2024 ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் 14 நாட்கள் காலஅவகாசம் அளித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.