தபால் மூல வாக்களிப்பு – முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

1 week ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிற்பகல் 4 மணியுடன் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இதன்போது அவர்களது பொலிஸ் நிலையத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் தமது தபால் மூலமான வாக்களிப்புக்களைப் பதிவு செய்திருந்தனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு, வவுனியா கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் வாக்குபதிவுகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் களுத்துறை, அநுராதபுரம் ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றுகின்ற பொலிஸார் இதன்போது தமது தபால் மூலமான வாக்குகளை இன்றைய தினம் பதிவு செய்திருந்தனர்.