பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 5 பேர் பலி

2 weeks ago
World
aivarree.com

பிலிப்பைன்ஸின், மின்டனாவ் பகுதியில் வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.8 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்த சுமார் 200 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் என்பன சேதமடைந்துள்ளதுடன், மின்சரமும் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.