பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நபரை அதிகாரத்திற்கு கொண்டு வருவதே மக்களின் இலக்கு

1 week ago
Sri Lanka
aivarree.com

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமை தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களுக்கு தெரிவிக்காத காரணத்தினால் 44% மக்கள் வாக்களிக்க முடிவு செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள IT வளாகத்தில் கல்வி பயின்ற புதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய கல்வி முறைக்குப் பதிலாக சர்வதேச கல்விக்கு நிகரான கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுளளார்

அத்துடன் சமூக வலைதளங்களில் நடக்கும் தவறான செயல்களைப் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்பட தேவையில்லை, உலகின் பிற நாடுகளின் குழந்தைகளுடன் போட்டியிடக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் இலங்கையின் மிகப்பெரும் கட்சியான பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவும், அமைச்சராகவும் தனது செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நபரை அதிகாரத்திற்கு கொண்டு வருவதே மக்களின் பிரதான இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.