இன்று ஆரம்பமாகும் பாரா ஒலிம்பிக் – இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 போட்டியாளர்கள்

2 weeks ago
SPORTS
aivarree.com

2024 ஆம் ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று (28) பிரான்சின் பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் 22 விளையாட்டு போட்டிகள் உள்ளடங்கியதுடன், 189 நாடுகளைச் சேர்ந்த 4,400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:

  • சமித துலான் – F 44 ஈட்டி எறிதல்
  • நுவான் இந்திக – T 44 100 மீற்றர் ஓட்டப்போட்டி
  • பிரதீப் சோமசிறி – T46 1,500 மீற்றர் ஓட்டப்போட்டி
  • பாலித பண்டார – F 42 குண்டு எறிதல்
  • பிரசன்ன ஜயலத் – T42 100 மீற்றர் ஓட்டப்போட்டி
  • ஜனனி தனஞ்சய – T47 நீளம் பாய்தல்
  • நவீத் ரஷீன் – நீச்சல்
  • சுரேஷ் தர்மசேனா – சக்கர நாற்காலி டென்னிஸ்

மேலும், அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.