கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பிற்கு எதிராகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிர்மாணிப்பதற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து தேர்தல் காலங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை எனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறும் கூறியிருந்தார்.
இருப்பினும், போராட்டக்காரர்கள் நடை பேரணிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது, ஏற்பாட்டாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.