உலகின் முன்னணி இ-கொமர்ஸ் நிறுவனமான அமேசான், 2024ஆம் ஆண்டு முதல் கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஹயுண்டாய் நிறுவனம் முதற்கட்டமாக அமெரிக்காவில் கார்களை ஒன்லைனில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் அதற்கான ஒத்துழைப்பை அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Amazon.com இல் ஹையுண்டாய் டிஜிட்டல் ஷோரூமை விரிவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட நடவடிக்கையில் இது ஒரு முன்னேற்றம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், வாகனத்தின் விலையைக் கணக்கிடுதல், விற்பனையை முடிக்க டீலரைக் கண்டறிதல் உள்ளிட்ட பல பணிகளை வாடிக்கையாளர்கள் செய்ய முடியும்.