BREAKING: ஜனாதிபதி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

1 month ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் அந்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக மேலதிகமாக செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நாட்களில் மாவட்ட செயலாளர், தேர்தல் அலுவலகம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 26ஆம் திகதி தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம் செய்யப்படும்.