குளவி தாக்குதல் காரணமாக சிகிரியா உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் குளவி தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
எவ்வாறாயினும் 08 பேரைத் தவிர ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.