நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – 716 பேர் கைது

4 weeks ago
Sri Lanka
aivarree.com

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 707 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 13 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 09 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.